சோழிங்கநல்லூரில் சிலம்பம் விளையாடி அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு

சோழிங்கநல்லூரில் சிலம்பம் விளையாடி   அதிமுகவுக்கு வாக்கு சேகரிப்பு
X
சோழிங்கநல்லூரில் சிலம்பம் விளையாடி, அதிமுகவுக்கு வேட்பாளர் ஓட்டு கேட்டார்..

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட காரப்பாக்கம், பகுதி முழுவதும் அதிமுக வேட்பாளரும் சென்னை புறநகர் மாவட்ட செயலாளருமான கேபி.கந்தன், கிழக்கு பகுதி கழக சுந்தரம், வட்ட கழக செயலாளர்.ஞானமூர்த்தி,பகுதி இளைஞர் அணி செயலாளர் .பழனிவேல் ஆகியயோர் அதிமுக ஆட்சியின் சாதனை மற்றும் தேர்தல் வாக்குறுதி கூறி பிரசாரம் மேற்கொண்டனர். அப்போது சிறுவர்களுடன் சிலம்பம் விளையாடி வாக்குகளை இரட்டை இலைக்கு சேகரித்தார்.

கூட்டணி கட்சியான பா.ஜ.க மாவட்ட பொது செயாலாளர் மோகன்குமார்,100க்கும் மேற்பட்டோருடன் காரப்பாக்கம் கிராம நெடுஞ்சாலையில் வரவேற்பு ஏற்பாடு செய்திருந்தார். வேட்பாளருக்கு மலர் தூவி, மாலை அணிவித்து, ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பை அளித்தார். கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள், பொது மக்கள் கலந்து கொண்டுனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்