சென்னையில் நாய் மீது துப்பாக்கி சூடு

சென்னையில் நாய் மீது துப்பாக்கி சூடு
X
சென்னையில் நாயை துப்பாக்கியால் சுட்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை மேடவாக்கம் அடுத்த சித்தாலப்பாக்கம், சங்கராபுரம், 1வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ஸ்ரீதரன்(37). இவர் தெருவில் சுற்றி வந்த நாட்டு நாய் ஒன்றை செல்லமாக வீட்டில் வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 7ம் தேதி உடலில் ரத்த காயங்களுடன் அந்த நாய் வீட்டுக்கு வந்ததுள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீதரன் உடனடியாக அந்த நாயை அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு எடுத்து சென்று சிகிச்சை அளித்தார்.

நாளை பரிசோதித்த டாக்டர் நாயின் உடலில் துப்பாக்கி தோட்டா(ஏர் கன்) இருப்பதை பார்த்தார். இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் அந்த தோட்டாவை டாக்டர் வெளியே எடுத்து சிகிச்சை அளித்தார். இது தொடர்பாக ஸ்ரீதரன் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயை துப்பாக்கியால் சுட்ட நபரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது