திமுக போட்டோ சூட் அரசியல் தான் செய்து கொண்டிருக்கிறது -விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் பேட்டி

திமுக போட்டோ சூட் அரசியல் தான் செய்து கொண்டிருக்கிறது -விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் பேட்டி
X
திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது, அதிமுகவினர் சொல்வது போல் இது போட்டோ சூட் அரசியல் தான் -விஜய பிரபாகர்

ஓராண்டு கால திமுகவின் ஆட்சியில் மின்வெட்டு அதிகம் உள்ளது, அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. திமுக ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் வர வர கோட்டை விடுகிறார்கள் என விஜயகாந்த் மகன் விஜயபிரபாகர் பேட்டி.

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற தேமுதிக மேடவாக்கம் ஊராட்சி கழக செயலாளர் பொன்மலர் P.A. சிவா - குமாரி தம்பதியின் மகள் S.ரேகனாவின் மஞ்சள்நீராட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் கலந்து கொண்டு வாழ்த்தினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்:- ஓராண்டு கால திமுகவின் ஆட்சியில் மின்வெட்டு அதிகம் உள்ளது, அதிமுக ஆட்சியில் மின்வெட்டு இல்லாமல் இருந்தது. திமுக ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் வர வர கோட்டை விடுகிறார்கள் என்றார்.

தேர் விபத்து பற்றி கேட்டதற்கு, இந்த விபத்து தொடர்பாக மக்கள் மீது வீண் பழி சுமத்துவது போல் உள்ளது. அனுமதி பெறவில்லை என்றால் தடுத்திருக்கலாம், இனிவரும் காலங்களில் இதுபோல் நடக்காமல் பார்த்து கொள்ள வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

திமுக சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாக உள்ளது, அதிமுகவினர் சொல்வது போல் இது போட்டோ சூட் அரசியல் தான் செய்து கொண்டிருக்கிறது. ஒரு இடத்திற்கு போய் டீக் குடிப்பது, உணவு உண்பது தான் நடக்கிறது. தேர்தல் வாக்குறுதியை செய்யவில்லை, ஒரு மாயையை உருவாக்கிறார்கள் எல்லாம் செய்வது போல், அடிப்படை தேவையை மக்களுக்கு செய்தாலே நல்லா இருக்கும். கேப்டன் நல்லா இருக்கிறார். முன்பை விட சிறப்பாக இருப்பதாக கூறினார். பட்டண பிரவேசம் குறித்து கேட்டதற்கு கேப்டன் அறிக்கை தயாரித்துள்ளதாகவும் அதை முறைப்படி தலைமை அறிவிப்பதாகவும் தெரிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!