பள்ளிக்கரணையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு: தீயணைப்புத்துறையினர் மீட்பு

பள்ளிக்கரணையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாடு: தீயணைப்புத்துறையினர் மீட்பு
X

பள்ளிக்கரணையில் கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். 

பள்ளிக்கரணையில் கான்கிரீட் சிலாப் உடைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்த பசுமாட்டை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர். 

பள்ளிக்கரணையில், 'கான்கிரீட் சிலாப்' உடைந்து கழிவுநீர் தொட்டியில் விழுந்து தவித்த பசுமாடு ஒன்றை தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.

சென்னை, பள்ளிக்கரணை, பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ராஜா. இவரது வீட்டு பகுதியில் மழைக்காக ஒதுங்கிய பசுமாடு ஒன்று, கழிவுநீர் தொட்டி மேல் இருந்த, 'கான்கிரீட் சிலாப்' மீது நின்று கொண்டிருந்தது.

அந்த, கான்கிரீட் சிலாப் மழையில் ஊறி இருந்ததால் மாட்டின் எடை தாங்காமல் உடைந்ததால் மாடு கழிவுநீர் தொட்டியில் விழுந்தது. சம்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாட்டை மீட்க முயன்றனர்.

அந்த முயற்சி தோல்வியடைந்ததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அரை மணி நேர போராட்டத்திற்கு பின் மாட்டை உயிருடன் மீட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!