தையூரில் கொரோனா நோயாளிகளுக்காக 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது

தையூரில் கொரோனா நோயாளிகளுக்காக 1000 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது
X

கட்டிடத் தொழிலாளர் நலவாரிய கட்டிடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் இன்று ஆய்வு செய்தார்

தையூரில் உள்ள கட்டிடத் தொழிலாளர் ஓய்வறை கட்டிடத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 1000 படுக்கைகள் தயார்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த தையூரில் கட்டிடத் தொழிலாளர் நலவாரியத்தின் சார்பில் 1000 படுக்கைகள் கொண்ட வெளிமாநில தொழிலாளர் தூங்கும் அறைகள் மற்றும் ஓய்வறைக் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடம் கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பின் போது சிகிச்சை மையமாக செயல்பட்டது, பின்னர் கொரோனா நோயின் தாக்கம் குறைந்ததை அடுத்து மூடப்பட்டது.

தற்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது, இதையடுத்து இந்த வெளிமாநில தொழிலாளர் ஓய்வறை கட்டிடத்தை மீண்டும் கொரோனா சிகிச்சை மையமாக பயன்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி, அந்த கட்டிடத்தை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் இன்று ஆய்வு செய்தார்.ஆய்வின்போது திருப்போரூர் வட்டாச்சியர் ரஞ்சினி உடன் இருந்தார்.

விரைவில் இந்த வளாகத்தில் தொற்று குறைவாக உள்ள கொரோனா நோயாளிகளை தங்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் கூறினார்,

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil