குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பெண்களை சந்தித்தார் தன்சானியா நாட்டின் ஆணையர்
பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் உள்ள பெண்களை தன்சானியா நாட்டின் ஆணையர் அனிஷா மெப்ஹா சந்தித்து உரையாற்றினார். பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் பின் தங்கிய பெண்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து கொடுக்கப்படுகிறது. குறிப்பாக பெண்கள் வாழ்க்கை தரம் உயரும் வகையில் கடன் உதவி, தொழில்பயிற்சி, தற்காப்பு கலை உள்ளிட்ட பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை சார்பில் செய்து கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த அறக்கட்டளை எவ்வாறு செயல்படுகிறது என்பதையும், இந்த அறக்கட்டளை உறுப்பினர்களை சந்திக்க தன்சானியா நாட்டின் ஆணையர் அனிஷா மெப்ஹா சென்னை இன்று வருகை தந்தார்.
பின்னர் பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பெண்களுக்கு, பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை செய்துள்ள பணிகள் குறித்து எடுத்து கூறப்பட்டது. மேலும் இந்த அறக்கட்டளை மூலம் பயிற்சி பெற்ற பெண்கள் தங்களுடைய கைவினை பொருட்களை தன்சினியா நாட்டின் உயர் ஆணையர் அனிஷாவிற்கு வழங்கி கவுரவித்தனர்.
தொடர்ந்து அங்குள்ள இளம் பெண்கள் தாங்கள் கற்று வரும் தற்காப்பு கலையான சிலம்பம் பயிற்சியையும் உயர் ஆணையர் அனிஷா முன்பு செய்து காட்டினர். தொடர்ந்து அந்த பெண்களுடன் சிறிது நேரம் உரையாற்றியதுடன், அந்த பெண்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக வாக்குறுதி அளித்தார். உடன் பெண்கள் முன்னேற்ற அறக்கட்டளை நிறுவனர் திவ்யா உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu