கடத்தப்பட்ட குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட போலீஸாருக்கு ஆணையர் பாராட்டு
X
கடத்தப்பட்ட குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட போலீசாரை தாம்பரம் காவல் ஆணையர் பாராட்டினார்
By - S.Kumar, Reporter |31 Jan 2022 7:45 PM IST
கடத்தப்பட்ட குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட போலீசாரை தாம்பரம் காவல் ஆணையர் பாராட்டினார்
கடத்தப்பட்ட குழந்தையை 3 மணி நேரத்தில் மீட்ட போலீசாரை தாம்பரம் காவல் ஆணையர் பாராட்டினார், குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர் நன்றி தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் வசித்து வரும் ஏமந்த் குமார்(38), என்பவரது குழந்தை பிறந்து ஒரு மாதமே ஆன நிலையில் காணாமல் போனதாக கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரின் கேளம்பாக்கம் உதவி ஆணையர் ரவிகுமரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சென்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்களில் காவல் குழுவினர் தேடினர்.
இந்நிலையில் சென்ட்ரல் இரயில் நிலையத்தில் சந்தேகத்திற்க்கு இடமாக கைக்குழந்தையோடு சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரித்த போது கையில் இருந்த குழந்தை குறித்து விவரம் ஏதும் அவர்களுக்கு தெரியவில்லை.இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களுடன் ஈடுபட்ட கிடுக்குபிடி விசாரணையில் குழந்தை அவர்களுடையது இல்லை என்பது தெரியவந்தது. திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் குழந்தை பிறக்காததால் குழந்தை மீது உள்ள ஏக்கத்தில் ஏமந்த் குமாருக்கு 3 குழந்தைகள் இருப்பதால் ஒரு குழந்தையை கடத்தியதாக ஒப்புக்கொண்டனர்.
அவர்களிடம் இருந்து பச்சிளம் குழந்தையை மீட்டு தாம்பரம் காவல் ஆணையர் எம்.ரவி முன்னிலையில் கேளம்பாக்கம் காவல் ஆய்வாளர் மகுடீஸ்வரி ஆகியோர் குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.கண்ணீர் மல்க குழந்தையை பெற்றுக் கொண்ட பெற்றோர் தாம்பரம் காவல் ஆணையருக்கு நன்றியை தெரிவித்தனர்.
குழந்தை கடத்தப்பட்டு 3 மணி நேரத்தில் மீட்ட போலீசாரை தாம்பரம் காவல் ஆணையர் பாராடினார். குழந்தையை கடத்திய மஞ்சு மற்றும் கோமளா ஆகியோர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu