சோழிங்கநல்லூர்: மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுகவினர் நிவாரண உதவி
சோழிங்கநல்லூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக புற நகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்
செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி 194வது வட்டம் கஸ்தூரிபாய் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டக் கழகச் செயலாளர் எம்.சுரேஷ்குமார் ஏற்பாட்டில் 10 கிலோ அரிசி, பிரட், கோதுமை, புடவை உட்பட பல்வேறு நிவாரண உதவிகளை மாவட்டக் கழகச் செயலாளர், முன்னாள் எம்எல்ஏ கே.பி.கந்தன் கலந்து கொண்டு வழங்கினார்.
நிவாரணம் வழங்குவதற்கு முன்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட கழக செயலாளர் கே.பி.கந்தன் பார்வையிட்டு ஆய்வு செய்த பின்பு, அரசு அதிகாரிகளிடம் உடனடியாக மழை நீரை வெளியேற்ற வலியுறுத்தினார். நிவாரண உதவிகளை பெற்றுக்கொண்ட அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்தப்பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது அதிமுக வினர் எங்களது வீடு தேடிவந்து நலம் விசாரித்தார்கள். அதோடு இல்லாமல் இன்று அரிசி, புடவை, கோதுமை மாவு, பிரட் உட்பட தற்போதுக்கு தேவையான பொருட்களை கொடுத் திருக்கிறார்கள் இதற்காக அவங்களுக்கு நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்றனர்.
இந்த நிகழ்ச்சியில், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி செயலாளர் காரப்பாக்கம் எம்.கே.பழனிவேல், பகுதி இணைச் செயலாளர் சரஸ்வதி தர்மன், பகுதி துணை செயலாளர் தினேஷ் பாபு மற்றும் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu