சென்னையில் பள்ளத்தில் கார் பாய்ந்து வாலிபர் பலி

சென்னையில் பள்ளத்தில் கார் பாய்ந்து வாலிபர் பலி
X

சென்னை துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் விபத்துக்குள்ளான கார்.

சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகரை சேர்ந்தவர் முகுந்தன்(26). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர் நேற்று இரவு வேளச்சேரியில் உள்ள தனது நண்பரை வெளிநாட்டிற்கு வழி அனுப்பி வைக்க மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அவரை வழியனுப்பிவிட்டு அதிகாலை 3 மணி அளவில் வீட்டிற்கு செல்ல துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் அருகில் இருக்கும் சதுப்பு நில பகுதிக்குள் பறந்து சென்று விழுந்தது. இதில் காரை ஓட்டி வந்த முகுந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பள்ளிக்கரணை போலீசார் முகுந்தன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.


Tags

Next Story
how will ai affect our future