சென்னை மாநகராட்சி 190வது வார்டு விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

சென்னை மாநகராட்சி 190வது வார்டு விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

சென்னை மாநகராட்சி 190வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விசிக வேட்பாளர் பள்ளிகரணை பன்னீர்தாஸ் வாக்கு சேகரித்தார்.

சென்னை மாநகராட்சி 190வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு.

சென்னை மாநகராட்சி 190வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சி, 190வது வார்டு, மாமன்ற உறுப்பினர் பதவிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளரும், முன்னாள் மாமன்ற உறுப்பினருமான பள்ளிகரணை பன்னீர்தாஸ் 190 வது வார்டுக்குட்பட்ட ராஜீவ்காந்தி தெரு, பள்ளிக் கூட சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னை மரம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். செல்லும் இடங்களில் எல்லாம் பொது மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

ஏற்கனவே 190வது வார்டில் பணி செய்த காரணத்தினால் மக்கள் நிச்சயம் வாக்களிப்பதாக கூறி வேட்பாளரை உற்சாகமாக வரவேற்றனர். மக்களுக்கு குடிநீர், தரமான சாலை, தெரு விளக்குகள், சிசிடிவி கேமராக்கள், சமூக நல கூடம், இளைஞர்கள் பயன் பெறும் வகையில் உடற்பயிற்சி கூடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருவதாகவும் வாக்குறுதி அளித்தார்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!