திருப்போரூரில் தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ. பாலாஜி துவக்கி வைத்தார்!

திருப்போரூரில்  தடுப்பூசி முகாம்: எம்.எல்.ஏ. பாலாஜி துவக்கி வைத்தார்!
X

திருப்போரூரில் கொரோனா தடுப்பூசி முகாமை எஸ் எஸ் பாலாஜி எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி முகாமை எம்.எல்.ஏ. பாலாஜி துவக்கி வைத்தார்.

கொரானா இரண்டாம் அலையின் தாக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் அதிகரித்து வரும் வேலையில் அவற்றை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அரசு பொது மருத்துவமனையில் இன்று 18 வயதுக்கு மேல் 44 வயதுக்குட்பட்ட அனைவருக்கும் இலவச தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று துவங்கியது பொதுமக்கள் ஆர்வமுடன் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்தி செல்கின்றனர்.

இந்த முகாமை திருப்போரூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்

Tags

Next Story
ai marketing future