செங்கல்பட்டு: எம்பி பெயரில் இ-பாஸ்... பிரஸ் ஸ்டிக்கர்... காரில் பெண்ணுடன் உல்லாசம்... பல் டாக்டர் லீலைகள்
கைதான பல் டாக்டர்.
செங்கல்பட்டு மாவட்டம் பள்ளிகாரணை ரேடியல் சாலையில் இரு புறமும் உள்ள சதுப்பு நில பகுதியில் சாலையை ஒட்டி புதர் போல் செடிகள் வளர்ந்து, மின் விளக்குகள் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படும். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி இங்கு திருநங்கைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அதனை கட்டுப்படுத்த பள்ளிகரணை போலீசார் இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அவ்வழியாக செல்லும் சிலர் வாகனங்களை நிறுத்தி சதுப்பு நிலத்தில் இருக்கும் பறவைகளை கண்டுகளிப்பார்கள். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 9 மணியளவில் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் புதரை ஒட்டிய பகுதியில் சொகுசு கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.
அவ்வழியாக ரோந்து வந்த பள்ளிகாரணை போலீசாா் புதரை ஒட்டி நின்ற சொகுசு கார் மீது சந்தேகமடைந்தனா். அந்த கார் அருகில் சென்று பார்த்த போது, காரில் ஒரு நபர் இளம்பெண்ணுடன் அரை குறை ஆடைகளோடு உல்லாசத்தில் ஈடுபட்டிருந்ததை கண்டனனா்.
அந்த காரின் முன்பகுதியில் எம்.பி. பாஸ் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்த போலீசாா் இது யாருடைய கார் என கேட்க தான், தென்சென்னை திமுக எம்.பி.க்கு நெருக்கமான உறவினர் என காரில் அமர்ந்தபடியே அலட்சியமாக கூறியுள்ளாா். காரில் பெண்ணுடன் இருந்தவர்.
பெரிய இடத்து விவகாரம் நமக்கு எதற்கு என்று எண்ணிய போலீசாா், இதுபோன்ற இடங்களில் பெண்களுடன் காரில் நிற்ககூடாது என அவரை எச்சரித்து அனுப்பியுள்ளார். போலீசார் தன்னைவிட்டால் போதும் என காரில் இருந்த இளம்பெண் அரை குறை ஆடையுடன் காரில் இருந்து இறங்கி அவருடைய இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிவிட்டார்.
அந்த இருசக்கர வாகனத்தில் (Press) பிரஸ் என்ற ஸ்டிக்கர் ஒட்டியிருந்ததையும் போலீசார் கவனித்தனா். அடுத்த நாள் காலையில், காரில் இருந்தவர் மீது ஏற்பட்ட சந்தேகத்தினால், பள்ளிக்காரணை போலீஸ் ஆய்வாளர் தென்சென்னை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனுக்கு செல்போனில் தொடர்புகொண்டு கார் பதிவு எண்ணை குறிப்பிட்டு உங்களுடைய பாஸ் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறாா்.அது நீங்கள் கொடுத்ததுதானா? என்று கேட்டதற்கு நான் அப்படி யாருக்கும் வழங்கவில்லை.அவா் யாா் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து போலீஸ் ஆய்வாளரிடம் பொய் கூறி அவரை ஏமாற்றிவிட்டு சென்ற இளைஞரின் கார் பதிவு எண்ணை வைத்து அவரை தேடினர். பின்னர் சென்னை மடிப்பாக்கம் சதாசிவம் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று விசாரணைக்காக பள்ளிகாரணை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் பெயர் ஷாம் கண்ணன்(27) என்பதும் , சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனையில் பல் மருத்துவராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
போலியாக திமுக எம்பியின் காா் பாஸ்ஸை தயாரித்ததாகவும், காரில் இருந்த பெண் தனது பெண் தோழி என்றும் ஊரடங்கு காலம் என்பதால் போலீசாரிடம் இருந்து தப்பிக்கவும், சுங்க கட்டணத்தை தவிர்க்கவும் இதுபோன்று போலியான ஸ்டிக்கர் தயாரித்து காரில் ஒட்டி மோசடியில் ஈடுபட்டதை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஷாம் கண்ணனை பள்ளிகாரணை ஆய்வாளர் பிரவின் ராஜேஷ் கைது,அவா் மீது இந்திய தண்டனை சட்டம் 170,171,177,465,468 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu