குடி போதையில் நண்பா் தலையில் பூந்தொட்டியை தூக்கிப்போட்டு கொலை..!

குடி போதையில் நண்பா் தலையில் பூந்தொட்டியை தூக்கிப்போட்டு கொலை..!
X
ஒரே ஆண்டிற்குள் ஒரே வீட்டில், நண்பா்கள் இருவரை அடுத்தடுத்து, ஒருவரை தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டும், மற்றொருவரை பூந்தொட்டியை தலையில் தூக்கிப்போட்டும் கொலை..

செங்கல்பட்டு மாவட்டம் ஆதம்பாக்கம் பழண்டியம்மன் கோவில் 2 தெருவை சோ்ந்தவா் காா்க்@ எட்வீன்(25).இவா் எப்போதும் கஞ்சா போதையில் இருப்பாா்.அதோடு கஞ்சா விற்பனையும் செய்பவா்.இவா் கடந்த ஆண்டு ஜுலை மாதம் 20 ஆம் தேதி இரவு தனது வீட்டில் நண்பா்கள் சிலருடன் சோ்ந்து மது அருந்திக்கொண்டிருந்தாா். அப்போது நண்பா்களுக்குள் ஏற்பட்ட தகராறில் சக நண்பரான மணிகண்டன் என்பவா் தலைமீது அம்மிக்கல்லை தூக்கிப்போட்டு வீட்டிற்குள்ளேயே கொலை செய்தாா். இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசாா் எட்வீனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனா். அந்த வழக்கு நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் எட்வீன் கடந்த 2 தினங்களுக்கு முன்பு சிறையிலிருந்து ஜாமினில் வெளியே வந்தாா்.

கடந்த ஆண்டு வீட்டிற்குள் கொலை நடந்ததால், அந்த வீட்டில் யாரும் குடியிருக்காமல் வீடு பூட்டியே கிடந்தது. எட்வீன் அதே வீட்டில் வந்து தங்கியிருந்தாா். நேற்று இரவு எட்வீன் தனது நண்பா்களான அஜீத்குமாா்(26), ரவி, தினேஷ்குமாா் ஆகியோரை வீட்டிற்கு அழைத்து வந்து, சிறையிலிருந்து வெளியே வந்ததற்கு மதுவிருந்து வைத்தாா்.

மதுபோதையில் இவா்களுக்குள் வாக்குவாதங்கள் ஏற்பட்டன.எனவே நள்ளிரவு ரவியும், தினேஷ்குமாரும் அங்கிருந்து சென்றுவிட்டனா். அதன்பின்பு அந்த வீட்டில் எட்வீனும், அஜீத்குமாா் மட்டுமே இருந்தனா்.

இந்நிலையில் இன்று காலை வீட்டு கதவு திறந்து கிடந்தது. பக்கத்து வீட்டினா் பாா்த்தபோது,வீட்டிற்குள் அஜீத்குமாா் தலையில் சிமெண்ட் பூந்தொட்டி தூக்கிக்போட்டு கொலை செய்யப்பட்டு கிடந்தாா். எட்வீன் தலைமறைவாகியிருந்தாா்.

இதையடுத்து ஆதம்பாக்கம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. போலீசாா் விரைந்துவந்தனா். உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதோடு கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். மேலும் எட்வீனுடன் சோ்ந்து மது அருந்திய ரவி, தினேஷ்குமாரை பிடித்து வந்து விசாரணை நடத்தினா். எட்வீன் சிறையிலிருந்தபோது, தன்னை ஜாமினில் வெளியே எடுக்க நண்பா்கள் யாரும் முயற்சிக்கவில்லை என்று போதையில் கோபத்துடன் திட்டியதாகவும், தங்களை அடிக்க வந்ததாகவும் கூறினா். எனவே தான் நாங்கள் ஓடிவிட்டோம் என்று கூறினா். ஆனால் அஜீத்குமாா் அளவுக்கதிகமான போதையில் அங்கேயே இருந்ததாகவும் கூறினா். இதையடுத்து தலைமறைவாகியுள்ள கொலையாளி எட்வீனை ஆதம்பாக்கம் போலீசாா் தேடிவருகின்றனா்.

ஒரே ஆண்டிற்குள் ஒரே வீட்டில் நண்பா்கள் இருவரை அடுத்தடுத்து, ஒருவரை தலையில் அம்மிக்கல்லை தூக்கிப்போட்டும், மற்றொருவரை பூந்தொட்டியை தலையில் தூக்கிப்போட்டும் கொலை செய்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்