/* */

மாணவிக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு

ஜர்னலிசம் மாணவிக்கு ஆட்டோ ஓட்டுநர் பாலியல் தொல்லை வழக்குப்பதிவு செய்து ஆட்டோ ஓட்டுநரை தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

மாணவிக்கு  பாலியல் தொல்லை: ஆட்டோ ஓட்டுநர் மீது வழக்குப்பதிவு
X

சென்னையில் தனியார் கல்லூரியில் ஜர்னலிசம் படித்து வரும் மாணவிக்கு உபேர் ஆட்டோ ஓட்டுநர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக சமூக வலைதளத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது

தோழியுடன் நேற்று இரவு உபர் ஆட்டோவில் வந்தபோது தவறாக நடந்து கொண்டதாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளித்தும் விசாரிக்க பெண் காவலர் இல்லாமல் தான் தங்கி இருக்கும் ஹோட்டல் வந்து காவலர் ஒருவர் விசாரித்தாகவும்,

செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் நேரடியாக புகார் அளிக்க விடாமல் தொடர்ந்து தடுக்கும் வகையிலேயே காவலர்கள் பேசியதாகவும், காவல் நிலையம் வெளியிலேயே நின்று கொண்டு காவல் நிலையத்தில் மனுவை எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட ஆட்டோ ஓட்டுநர் புகைப்படம் மற்றும் உபர் ஆட்டோவில் பயணித்த தகவல் குறித்தும் போட்டோ ஆதாரங்களுடன் சமூக வலைதளத்தில் புகார் அளித்துள்ளார். ஆட்டோ ஓட்டுனர் செல்வம் என்பவர் தவறாக நடந்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

பாலியல் ரீதியாக தொந்தரவு செய்த ஆட்டோ ஓட்டுனர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பெண் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக தாம்பரம் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் சார்பில் டிவிட்டர் பக்கத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், ஆட்டோ ஓட்டுநரை தேடி வருவதாகவும் பதிலளித்துள்ளனர்.

Updated On: 26 Sep 2022 5:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...