சென்னை மேடவாக்கம் பூஸ்டர் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு
சென்னை மேடவாக்கத்தில் நடந்த பூஸ்டர் தடுப்பூசி முகாமை அமைச்சர் மா. சுப்பிரமணியன் ஆய்வு செய்தார்.
சென்னை மேடவாக்கம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்று வரும் பூஸ்டர் தடுப்பூசி முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில்
சென்னையில் மட்டும் 160 இடங்களிலும் மற்ற மாவட்டங்களில் 440 என தமிழகமெங்கும் 600 இடங்களில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
முன்னதாக 1 லட்சம் நபர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டுள்ள நிலையில் 5 லட்சத்து 48 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசியினை போட்டுக்கொள்ள தகுதி படைத்தவர்களாக கண்டறியப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கான வாரந்தோறும் வியாழக்கிமை அன்று பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி குறித்த குறுந்தகவல் அனுப்பி வைக்கப்படுகிறது. ஜனவரி இறுதிக்குள் 10 லட்சம் தடுப்பூசி போட தகுதி உடையவர்களாக கண்டறியப்பட உள்ளனர்.
டெல்டா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சத்து 12 ஆயிரம் பேர் இந்தியாவில் பாதிப்படைந்து உள்ளார்கள்.
பொங்கலையடுத்து பாதிக்கட்டவர்களின் எண்ணிக்கை அதிகாரிக்கும் என தெரிவித்திருந்தோம். அந்த வகையில் 3000 பேருக்கு தொற்று எண்ணிக்கை அதிகரித்து உள்ளது.
இன்றும் 2000 பேருக்கு தொற்றின் எண்ணிக்கையில் கூடும் வாய்ப்புள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் ஒன்றரை லட்சத்தும் மேலாக மாதிரிகளை எடுத்துக் கொண்டு பரிசோதித்துக் கொண்டு இருக்கிறோம்.
எம்.ஜி.ஆரை மட்டுமல்ல அவரது சிலையை கூட பார்க்காதவர்கள், தாங்கள் தான் எம்.ஜி.ஆர். சிலையை வைத்ததாக கூறிக்கொள்கிறார்கள். கலைஞர் ஆட்சியில் தான் சைதை தொகுதியில் எம்.ஜி.ஆரின் சிலையானது திறந்து வைக்கப்பட்டது. ஆனால் உண்மைக்கு மாறாக அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டதை போன்றும் டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழக பெயரை அ.தி.மு.க.வினர் தான் வைத்தது போல பொய்யான பரப்புரையை செய்து கொண்டிருப்பது விந்தையாக உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu