நடிகர் விஜய் வீட்டில் போலீசார் இரவில் திடீர் சோதனை - காரணம் இதுதான்!

நடிகர் விஜய் வீட்டில் போலீசார் இரவில் திடீர் சோதனை - காரணம் இதுதான்!
X

 நடிகர் விஜய்

நடிகர் விஜய் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்று தெரிய வந்துள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரையில் வசித்து வரும் நடிகர் விஜய் வீட்டிற்கு, நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. நேற்று காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட நபர் ஒருவர், நடிகர் விஜயின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு துண்டித்தார்.
இது குறித்து, உடனடியாக நீலாங்கரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நடிகர் விஜயின் வீட்டை இரவில் போலீசார் சோதனையிட்டனர். பின்னர் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு, வீடு முழுவதும் அங்குலம் அங்குலமாக சோதனை செய்யப்பட்டது. சோதனைக்கு பிறகு, வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதனிடையே, சைபர் கிரைம் போலீசார் மூலம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணின் முகவரியை கண்டறிந்து நேரில் சென்று பார்த்த போது, மிரட்டல் விடுத்தவர், விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த புவனேஸ்வர் என்று தெரிய வந்தது. அவர், மன நலம் பாதிக்கப்பட்ட நபர் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவரை எச்சரித்து, உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர். இவர் தொடர்ச்சியாக மாநில முதல்வர்கள், நடிகர்கள்கள் என பலமுறை இதுபோல் மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!