நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: மனநலம் பாதித்த நபர் கைது

நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: மனநலம் பாதித்த நபர் கைது
X

நடிகர் சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ்.

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதித்த நபர் கைது.

சென்னை கொட்டிவாக்கத்தில் வசித்து வரும் நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமாரின் வீட்டிற்கு வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு செல்போன் அழைப்பு மூலம் மிரட்டல் வந்தது.

அதன் பேரில் சைபர் கிரைம் போலீசாரின் உதவியோடு செல்போன் எண்ணை ஆராய்ந்து பார்த்தனர். மோப்ப நாய் உதவியோடு வந்த போலீசார், சரத்குமாரின் வீடு முழுவதும் சோதனை செய்து பார்த்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்தது.

அழைப்பு வந்த செல்போன் எண் விழுப்புரம் மாவட்டம், கூனிமேடு பகுதியை சேர்ந்த மணிபாலன் என்பவருடையது என தெரிய வந்ததின் பேரில் நீலாங்கரை உதவி ஆய்வாளர் பிரபு தலைமையில் போலீசார் சென்று விசாரித்த போது அதே பகுதியை சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட புவனேஷ்(20), என்ற நபர் தான் செல்போனை எடுத்து மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதால் உறவினர்களிடம் எழுதி வாங்கிக் கொண்டு அவரை விடுவித்தனர்.

இவர் முன்னாள் முதலமைச்சர்கள், நடிகர் விஜய், அஜித், தற்போதைய முதல்வர் என முக்கிய பிரபலங்களுக்கு மிரட்டல் விடுப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!