மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜ.,தலைவர் அண்ணாமலை
தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை மீது புகார் அளிக்க தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்த இந்திய குடியரசு கட்சியினர்.
தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை, அக்கட்சியில் தன்னை இணைத்து கொள்வதற்காக தமது ஐ.பி.எஸ்., பணியை ராஜினாமா செய்து விட்டு வந்தவர். தமிழக பா.ஜ தலைவராக பொறுப்பேற்றது முதல் பரபரப்பு மிகுந்த கருத்துக்களை அண்ணாமலை தொடர்ந்து துணிச்சலாக வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவரது மேலும் ஒரு கருத்து பலத்த சர்ச்சையை கிளப்பியுள்ளது.
சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தாம்பரம் காவல் ஆணையரக அலுவலகத்தில் இந்திய குடியரசு கட்சியின் தென்சென்னை மாவட்டம் சார்பில் பா.ஜ. தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவில், பட்டியலின மக்களை தரக்குறைவாகவும், சாதிய கட்டமைப்பில் இருப்பதாக ஒரு பிரிவு மக்களை குறிப்பிட்டு உயர்ந்த இடத்தில் சென்றடைந்ததாக தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை பதிவு செய்துள்ளார்.
எஸ்.சி.,எஸ்.டி வன்கொடுமை சட்டம் 1989ன் படி, எஸ்.சி.,எஸ்.டி மக்களை இழிவாக குறிக்கும் விதமாக சொல்லாகவோ, செய்கையாகவோ, எழுத்தாகவோ, குறிக்கும் வகையில் ஒருவரின் நடவடிக்கை இருக்குமானால் அது தீண்டாமையை கடைப்பிடிக்கும் செயலாகும்,
எனவே, அண்ணாமலை மீது தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என கேட்டுக் கொள்வதாக கூறப்பட்டுள்ளது.
செய்தியாளர்களை சந்தித்து பேசிய குடியரசு கட்சியினர், காவல்துறையில் தாங்கள் தமிழக பா.ஜ.,தலைவர் அண்ணாமலை மீது அளித்த புகார் மனுவிற்கு மனு ஏற்பு ரசீதை வழங்கவில்லை என கூறினர். மேலும் ஆணையரை நேரில் சந்திக்க தங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும் அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
தொடர்ந்து, பத்திரிக்கையாளர் சந்திப்பு மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக பா.ஜ தலைவர் அண்ணாமலை தெரிவித்த பட்டியலின மக்கள் குறித்த சர்ச்சை கருத்து, அவருக்கு அரசியல் நெருக்கடியை ஏற்படுத்துமா?
பொறுத்திருந்து பார்ப்போம்..!.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu