பெத்தேல் நகர் பகுதி மக்கள் போராட்டம் : எம்எல்ஏ அமைதி பேச்சு வார்த்தை

பெத்தேல் நகர் பகுதி மக்கள் போராட்டம் : எம்எல்ஏ அமைதி பேச்சு வார்த்தை
X

பெத்தேல் நகர் பகுதி மக்களிடம் அமைதி பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ்

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் பெத்தேல் நகர் பகுதி மக்கள் போராட்டத்தை கைவிடக்கோரி எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பேச்சு வார்த்தை நடத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதியில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி படிவம் 6ஐ அப்பகுதியில் உள்ள வீடுகளின் சுவற்றில் இன்று காலை முதல் வருவாய்த்துறை அதிகாரிகள் வீடு வீடாக ஒட்டி வந்தனர்

இதை தொடர்ந்து அப்பகுதி மக்கள் ஒன்றினைந்து தொடர் போரட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அப்பகுதிக்கு வந்த சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் போராட்டம் நடைபெற்ற பகுதிக்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் கூறியதாவது:- பெத்தேல் நகர் பகுதி மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு தமிழக அரசு இப்பகுதி மக்களை பாதுகாக்கும் என்றும், தொடர்ந்து வருவாய் துறை அமைச்சர கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் வெளியூரில் உள்ளதால் அவர்களிடத்தில் நிலைமையை தொலைபேசியில் தொடர்புகொண்டு கூறியதாகவும்,

நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதால் வரும் 20ம் தேதி இப்பகுதி மக்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறோம். ஆகவே இந்த அரசு எப்போதும் மக்களுக்கு துணையாக இருக்கும் என்று கூறியதோடு போராட்டத்தினை கைவிடுமாறு அப்பகுதி மக்களிடையே வேண்டுகோள் விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட மக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil