மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்

மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவர் குழு சார்பில் விழிப்புணர்வு முகாம்
X

சென்னை பெரும்பாக்கத்தில் நடைபெற்ற மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களின் குழு சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம்

மகளிர் தினத்தை முன்னிட்டு மருத்துவர்களின் குழு சார்பில் பெண்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனை சார்பாக, மகளிர் தினத்தை தொடர்ந்து சோழிங்கநல்லூரில், தனியார் நட்சத்திர விடுதியில், பெண்களின் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தாம்பரம் நகராட்சி மேயர் வசந்தகுமாரி, ஐபிஎஸ் அதிகாரி காமினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.மருத்துவர்கள் குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பெண்கள் தங்களுக்கு ஏற்படக்கூடிய மன அழுத்தத்தை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் உடல் சார்ந்த பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.

கொரோனா பரவலால் கடந்த இரண்டு ஆண்டுகளாக வீட்டைப் பராமரித்துக் கொள்வது, வீட்டிலிருந்தபடியே வேலை செய்வது என ஒரே நேரத்தில் குடும்பம் மற்றும் வேலையை நினைத்துக் கொள்வதால் பெண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உள்ளனர்.எனவே அவர்களின் மன அழுத்தத்திலிருந்து அவர்கள் வெளியேறவும் உடல் சார்ந்த பிரச்சனைகளில் இருந்து தீர்வு காணவும் மகளிர் தினத்தை முன்னிட்டு இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துக் கொண்டனர்.இந்நிகழ்ச்சியில் மருத்துவமனை நிர்வாகிகள், மருத்துவர்கள் மற்றும் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
why is ai important to the future