சோழிங்கநல்லூர் அருகே தற்காப்பு பயிற்சி நிறுவனத்தில் விருது வழங்கும் விழா

சோழிங்கநல்லூர் அருகே தற்காப்பு பயிற்சி நிறுவனத்தில் விருது வழங்கும் விழா
X

லெஜென்ட் மாஸ்டர் விருது வழங்கும் விழா

சோழிங்கநல்லூர் வேல்ட்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் புத்தா தற்காப்பு பயிற்சி நிறுவனத்தில் லெஜென்ட் மாஸ்டர் விருது வழங்கும் விழா

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையில் வேல்ட்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் புத்தா என்ற தற்காப்பு பயிற்சி நிறுவனத்தின் சார்பில் லெஜென்ட் மாஸ்டர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அந்நிறுவனத்தின் தற்காப்பு பயிற்சியாளர் கராத்தே சேகர் தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு.பாபு , மெளரியா IPS, பூச்சிமுருகன், மல்லை சத்தியா கலந்து கண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். பின்னர் தற்காப்பு கலையில் சாதனை படைத்த பயிற்சியாளர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் அரசியல் மற்றும் சினிமா பிரமுகர்கள், கராத்தே பயிற்சியாளர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் குத்துச் சண்டை போட்டிகளில் பல விருதுகளை வாங்கிய மீனவரான கராத்தே சேகர் அவரது சொந்த உழைப்பில் உருவாக்கப்பட்ட பயிற்சி கட்டிடத்தில் கராத்தே, குங்பூ, குத்துசண்டை , சிலம்பம் , வாள்வீச்சு போன்ற பல பயிற்சிகளை அளித்து வருகிறார். தமிழக அரசு உதவி செய்தால் அடுத்த ஒலிம்பிக்கில் நிச்யம் தங்கம் வென்று தர முடியும் என தெரிவித்தார்.

Next Story
ai solutions for small business