தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி

தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
X

கொள்ளை முயற்சி. நடந்த தனியார் வங்கியின் ஏ.டி.எம் (HDFC) மையம்

சென்னை நூக்கம்பாளையம் சாலையில் தனியார் வங்கியின் ஏ.டி.எம் இயந்திரத்தை உடைத்து பணம் திருட முயன்றவர்களை தேடி வருகின்றனர்

பெரும்பாக்கம், நூக்கம்பாளையம் சாலையில் உள்ள தனியார் வங்கியின் ஏ.டி.எம்., இயந்திரத்தை உடைத்து, பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்த நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கம் ஊராட்சி, நூக்கம் பாளையம் சாலையில், தனியார் வங்கியின் ஏ.டி.எம்., உள்ளது. இன்று அதிகாலை சுமார் 3.15 மணி அளவில், அந்த ஏ.டி.எம்., இயந்திரத்தின் அலாரம் ஒலித்தது.அலாரம் சத்தம் கேட்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், இது குறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில், பெரும்பாக்கம் காவல்நிலைய, ரோந்து வாகன போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர்.

அப்போது ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் வைக்கப்பட்டுள்ள பகுதியின் கதவை கொள்ளையர்கள் திறக்க முயற்சித்திருப்பதும், அலாரம் அடித்ததால் அவர்கள் தப்பி ஓடி இருப்பதும் தெரியவந்தது.கொள்ளையர்களை அடையாளம் காண்பதற்காக, அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

Tags

Next Story
ai solutions for small business