ஹிப்பாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் கதவுகள் சேதம்: 2 பேர் கைது

ஹிப்பாப் தமிழா ஆதி வீட்டின் மீது கல் வீசி தாக்குதல்  கதவுகள்  சேதம்: 2 பேர் கைது
X



குடிபோதையில் ஹிப் ஆப் தமிழா வீட்டின் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய இருவர் கைது. சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூர் சீகிளிப் அவென்யூ 5வது டிரைவ் தெருவில் வசித்து வருபவர் ஹிப்பாப் தமிழா ஆதி இவர் ஹிப்பாப் பாடல்கள் பாடி பிரபலாமானவர், திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவரது வீட்டின் கதவில் மர்ம நபர்கள் சிலர் குடிபோதையில் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் ஹிப்பாப் தமிழா ஆதி வீட்டின் கதவு சேதமானது. எதிர் வீட்டில் வசிப்பவர்கள் இதனை கண்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்துள்ளனர். போலீசாரை கணடதும் மர்ம நபர்கள் காரை எடுத்துக் கொண்டு தப்பிச் சென்றனர். பின்னர் போலீசார் நிகழ்விடத்திற்கு சென்று சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது அங்கு வந்த காரின் பதிவெண்ணை கண்டுபிடித்தனர். அதை வைத்து காரின் உரிமையாளரான அஜய் வாண்டையாரின் வீட்டிற்கு சென்று போலீசார் விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் ஆக்டிங் டிரைவர் என்பது தெரியவந்தது. பின்னர் வடபழனியை சேர்ந்த பிரேம்குமார்(24), மதுரையை சேர்ந்த அர்ஜீன்(24), ஆகிய இருவரையும் கைது செய்த கானத்தூர் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags

Next Story
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை-  நிறுவனங்களுக்கு அறிவுரை