ஜோசியத்தை நம்பாதீங்க...!: குளோபல் மருத்துவமனை விழாவில் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு ருசிகர பேச்சு
சென்னை பெரும்பாக்கத்தில் குளோபல் மருத்துவமனையில், முதன்மை ஆஞ்சியோ பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற டி.ஜி.பி சைலேந்திரபாபு.
சென்னை பெரும்பாக்கத்தில் குளோபல் மருத்துவமனையில் முதன்மை ஆஞ்சியோ பிளாஸ்டிக் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த காற்றில் பலூன்கள் பறக்கவிடப்பட்டது. இந்நிகழ்வில், சிறப்பு விருந்தினராக தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு கலந்து கொண்டு, இதய ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை உணரும் வகையிலும், ஊக்குவிக்கும் வகையிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
மேலும் மருத்துவர்கள், செவிலியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதைத்தொடர்ந்து, மேடையில் பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு, நான் ஒரு காலத்தில் மருத்துவராக ஆசைப்பட்டேன். இப்போதும் நான் டாக்டர் தான் ஆராய்ச்சி மருத்துவர். அப்போது மருத்துவக் கல்லூரியில் இடம் கொடுக்கவில்லை. ஆனால் தற்போது மருத்துவமனைக்கு சிறப்பு விருந்தினராக அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அலோபதி மருத்துவம் கடந்த 400 ஆண்டுகளாக பெரிய வளர்ச்சியை கண்டுள்ளது.1991 - ஆம் ஆண்டில் எனது தந்தையை உடல்நலக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் சேர்த்த போது அவரை காப்பற்ற முடியவில்லை. தற்போது தொழில்நுட்ப வளர்ச்சியால் மருத்துவத் துறை பெரிய அளவில் முன்னேற்றம் கண்டுள்ளது. காவல் அதிகாரி ஒருவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட போது குறிப்பிட்ட மருத்துவருக்கு தொடர்பு கொண்டு அவர் வந்து சிகிச்சை அளித்த பிறகு அவர் மறுநாளே பணிக்கு சென்றார்.
ஜாதகத்தை நம்பி என் அலுவலகத்தில் வேலை பார்த்த அதிகாரி ஒருவர் உரிய நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ளாததால் உயிரிழந்தார். எனவே மருத்துவம் முறையாக படித்த மருத்துவர்களிடம் மட்டுமே அறிவுரையை கேட்க வேண்டும். ஜாதகம் மற்றும் ஜோசியத்தை நம்பாதீர்கள். மருத்துவர்களை நம்புங்கள் என்று தமிழக காவல்துறை டி.ஜி.பி சைலேந்திரபாபு ருசிகரமாக பேசி அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu