சோழிங்கநல்லூர் அதிமுக வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு

சோழிங்கநல்லூர் அதிமுக வேட்பாளருக்கு  உற்சாக வரவேற்பு
X
சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தனுக்கு கோவிலம்பாக்கம் ஊராட்சியில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட கோவிலம் பாக்கதில் அதிமுக வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.கந்தன் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். கடந்த 10 நாட்களாக கந்தன்சாவடி, கண்ணகி நகர். துரைபாக்கம், மேடவாக்கம், மடிப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்றும் வாகனத்தில் சென்றும் தீவிர வாக்கு சேகரித்தார்.

செல்லுமிடமெல்லாம் பெண்கள் மலர்தூவி ஆரத்தி எடுத்து வெற்றி திலகமிட்டு வரவேற்பு அளித்தனர். கோவிலம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட 12 வார்டுகளிலும் வீதி வீதியாக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். முன்னதாக ஸ்ரீவிநாயகர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

மாநில மாணவரணி துணை செயலாளர் பொறியாளர் மணிமாறன் தலைமையில் கும்பா மரியாதையுடன் ரோசாப்பூ மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பான வரவேற்பும் அளிக்கப்பட்டது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!