குழந்தை இல்லாத விரக்தியில் வயது முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை

குழந்தை இல்லாத விரக்தியில் வயது முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை
X
சென்னையில் குழந்தை இல்லாத விரக்தியில் வயது முதிர்ந்த தம்பதி தூக்கிட்டு தற்கொலை

சென்னை மடிப்பாக்கம் அடுத்த கீழ்கட்டளை, டாக்டர் ராமமூர்த்தி நகர் இரண்டாவது பிரதான சாலையை சேர்ந்தவர்கள் நம்பிராஜன்(76), இந்தியா சிமெண்ட் நிறுவனத்தில் வேலை செய்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாப்பா(76), இருவரும் கடந்த 15 ஆண்டுகளாக அங்கு வசித்து வந்த நிலையில் இருவரும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளனர்.குழந்தை இல்லாத மன உளைச்சலிலும் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று மதியம் முதல் நம்பிராஜனின் சகோதரர் சுப்பிரமணி செல்போனில் தொடர்பு கொண்ட போது அழைப்பை எடுக்கவில்லை, இதனால் சந்தேகமடைந்த சகோதரர் இரவு வீட்டிற்கு சென்று பார்த்த போது வீடு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது. ஜன்னல் வழியாக பார்த்த போது நம்பிராஜன் வீட்டின் வரவேற்பறையிலும், மனைவி பாப்பாத்தி படுக்கையறையிலும் தூக்கிட்ட நிலையில் தொங்கிக் கொண்டு இருந்தனர்.

மடிப்பாக்கம் போலீசார் உதவியுடன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து இருவரது உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

உடல்நிலை சரியில்லாததாலும், குழந்தைகள் இல்லாமல் தனிமையில் இருந்ததாலும் மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என அவரது சகோதரர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!