பள்ளிகரனை பகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்

பள்ளிகரனை பகுதியில் அதிமுக வேட்பாளர் தீவிர பிரசாரம்
X
செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பள்ளிகரனையில் அதிமுக வேட்பாளர் கே.பி.கந்தன் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநலூர் தொகுதிக்குட்பட்ட பள்ளிகரனை, பகுதி முழுவதும் அதிமுக வேட்பாளர் சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கே.பி.கந்தன் இன்று மாலை தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவருக்கு கிரேன் இயந்திரம் மூலம்பெரிய அளவிலான மாலை அனிவிக்கப்பட்டது

இப்பிரச்சாரத்தில் தெற்கு பகுதி கழக செயலாளர் குமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட துணை செயலாளர் பிராமிஸ் அம்பேத்கார் ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

100க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து கிரேனை கொண்டு 15 அடி உயர மாலை அனிவித்தும், மலர் தூவியும் கட்சி கொடி வண்ணத்தில் பலூன் பறக்கவிட்டும் செண்டை மேளம், பேண்டு வாத்தியம் முழங்க சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

அதிமுக ஆட்சியின் சாதனைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை கூறி பிரசாரம் மேற்கொண்டு இரட்டை இலை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். கூட்டணி கட்சி தொண்டர்களும் பொது மக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டுனர்.g

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!