மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு அதிமுகவினர் உதவிக்கரம்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு அதிமுகவினர் உதவிக்கரம்
X
மழை பாதித்த மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கிய அதிமுகவினர். 
சோழிங்கநல்லூர் அருகே, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 6000 பேருக்கு, அதிமுக சார்பில் நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டம், சோழிங்கநல்லூர் அடுத்த நீலாங்கரை 192 வட்ட அதிமுக சார்பில், சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் கேபி.கந்தன் தலைமையில், சென்னை புறநகர் மாவட்ட மீனவப்பிரிவு செயலாளர் நீலாங்கரை பீ.எஸ்.ராஜன் ஏற்பாட்டில், மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, முதல் கட்டமாக 6000 பேருக்கு, நல திட்ட உதவியாக அரிசி வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், மேற்கு பகுதி செயலாளர் டி.சி.கருணா, டாக்டர். ரம்யா உட்பட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களும் கலந்து கொண்டு, குமரகுரு அவின்யூ , வடக்கு சரஸ்வதி நகர், ராஜேந்திரன் நகர் ஆகிய பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்ங்கினர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்