நடிகை சினேகா, பிரசன்னா பணத்தை அபேஸ் செய்த பலே கில்லாடிகள்

நடிகை சினேகா, பிரசன்னா பணத்தை அபேஸ் செய்த பலே கில்லாடிகள்
X

நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா பைல் படம்

நடிகை சினேகா, பிரசன்னா ஆகியோரின் பணம் ரூ 25 லட்சத்தை அதிக வட்டி ஆசைக்காட்டி பலே கில்லாடிகள் அபேஸ் செய்தனர். இது குறித்து பிரசன்னா காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.

நடிகை ஸ்னேகாவின் கணவர் பிரசன்னா கானத்தூர் காவல் நிலையத்தில் மோசடி புகார் அளித்துள்ளார்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை, பனையூரில் குடும்பத்தோடு வசித்து வருபவர் நடிகை ஸ்கேனா, இவரது கணவர் நடிகர் பிரசன்னா, சமீபத்தில் சந்தியா மற்றும் சிவராஜ் கெளரி, என்பவர் மூலம் எம்.எஸ். கெளரி சிமெண்ட் அண்ட் மினரல் சிமெண்ட் கம்பெனியில் 26 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதாமாதம் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் பணம் கிடைக்கும் என தெரிவித்ததின் காரணத்தால் நடிகர் பிரசன்னா ஆன்லைன் மூலமாக 25 லட்சம் ரூபாயும் ரொக்கமாக 1 லட்சம் ரூபாயும் கொடுத்துள்ளார்.
முதலீடு செய்த மே மாதத்திலிருந்து தற்போது வரை மாதாமாதம் வழங்கும் தொகையை தராமல் ஏமாற்றி வருவதாகவும், பணம் குறித்து கேட்டதற்கு மிரட்டல் விடுப்பதாகவும் கூறி பிரசன்னா கானத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
ai powered agriculture