நடிகர் சூர்யா பிறந்த நாள்; முதியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய ரசிகர்கள்

நடிகர் சூர்யா பிறந்த நாள்; முதியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடிய ரசிகர்கள்
X

முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய ரசிகர்கள்.

நடிகர் சூர்யாவின் பிறந்த நாளான இன்று அவரது ரசிகர்கள் முதியோர் இல்லத்தில் கேக் வெட்டிக் கொண்டாடினர்.

தமிழ் திரையுலகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா தனது 46வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறார்.

இதனை முன்னிட்டு ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல் சினிமா பிரபலங்களும் நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக வடக்கு மாவட்ட தாம்பரம் நகர இளைஞரணி சூர்யா நற்பணி இயக்கம் சார்பில் நகர பொறுப்பாளர்கள் லோகேஷ், நகர கௌரவ தலைவர் சீரளான் அவர்களின் ஏற்பாட்டில், பழைய பெருங்களத்தூரில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ள முதியோர்கள் உடன் கேக் வெட்டி பிரியாணி வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் காஞ்சி வடக்கு மாவட்ட இளைஞர் அணி தலைவர் வண்டலூர் அயன் சூர்யா சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேக் மற்றும் உணவுப் பொருட்களை முதியோர்களுக்கு வழங்கினார்.

Tags

Next Story
photoshop ai tool