சோழிங்கநல்லூர்: சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞர், உயிருக்கு போராட்டம்

சோழிங்கநல்லூர்: சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில்  விழுந்த இளைஞர், உயிருக்கு போராட்டம்
X

சோழிங்கநல்லூரில் சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்த இளைஞரின் பைக்

சோழிங்கநல்லூரில் சாலை விரிவாக்க பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் விழுந்தார். அவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

செங்கல்பட்டு மாவட்டம் பொன்மார் ஊராட்சியில் 30 அடி சாலையில், நெடுஞ்சாலை துறை விரிவாக்க பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதில் அதிக மக்கள் செல்லும் முக்கிய சாலையில் 10 அடி ஆழத்துக்கு பாதுகாப்பு இல்லாமல் பள்ளம் தோண்டப்பட்டு உள்ளன.

சாலையில் இரவு நேரங்களில் மின் வெளிச்சம் இல்லாததால் இளைஞர் ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது சாலையோரத்தில் பள்ளத்தில் தவறி விழுந்தார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

காயம் அடைந்த இளைஞர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இதனால் உடனடியாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் மக்களுக்கு பாதிப்பு இல்லாமல் இரவு நேரங்களில் வாகனங்கள் செல்ல பாதுகாப்புடன் அப்பகுதியை சுற்றி வேலிகளை அமைத்து சாலைப் பணியை தொடங்க வேண்டும் என என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!