சென்னை பள்ளிக்கரணையில் ரவுடி ஓட, ஓட விரட்டி கொடூர கொலை

சென்னை பள்ளிக்கரணையில் ரவுடி ஓட, ஓட விரட்டி கொடூர கொலை
X

ரவுடி கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

Murder News -சென்னை பள்ளிக்கரணையில் ரவுடி ஓட, ஓட விரட்டி கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார்.

Murder News -சென்னை மேடவாக்கம் புஷ்பாநகரை சேர்ந்தவர் ஆல்வின்(எ)பிரைட்(28), இவர் பள்ளிகரணை காவல் நிலைய 'பி' பிரிவு சரித்திர பதிவேடு குற்றவாளி, இவரை நேற்று இரவு பள்ளிகரணை, அம்பேத்கர் சாலை, கண்ணபிரான் கோயில் அருகே காலி இடத்தில் வைத்து மர்ம நபர்கள் ஓட ஓட விரட்டி கொடூரமாக தலை, கழுத்து, முகம், கை, கால் என வெட்டி படுகொலை செய்துள்ளனர்.

மேலும் அவரது நண்பரான பெருமாள்(23), என்பவரை கை, கால்களில் வெட்டியதில் ஆபத்தான நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணையில் ரவுடி ஆல்வினுக்கும் சூரை மணி என்பவருக்கும் கஞ்சா விற்பனை செய்வதில் முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது, அதன் காரணமாக சூரை மணி ஆல்வினை கொலை செய்திருக்கலாம் என பள்ளிகரணை போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!