பெரும்பாக்கம் அருகே 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

பெரும்பாக்கம் அருகே 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது
X

கைது செய்யப்பட்ட மகேஷ்வரன்.

சென்னை பெரும்பாக்கம் அருகே 7 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் 33 வயதான பெண் ஒருவர் தனது கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 3 வருடங்களாக பிரிந்து வேறொரு நபருடன் முறையற்ற உறவில் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று குழந்தையின் தாயார் வேலைக்கு சென்ற நிலையில் தாயுடன் முறையற்ற உறவில் இருந்த மகேஷ்குமார் என்பவர் குழந்தையை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

இதனால் குழந்தையின் பிறப்புறுப்பில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தாய்க்கு மகேஷ்குமார் தெரிவித்தவுடன் அவர் வந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது குழந்தை வன்புணர்வு செய்யப்பட்டது மருத்துவ பரிசோதனையில் தெரியவந்தது.

இதனையடுத்து மருத்துவர்கள் சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் மகேஷ்குமாரை(33), கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்