பெரும்பாக்கம் பகுதியில் 15 கிலோ கஞ்சா கடத்தியவர் வாகனத்துடன் கைது

பெரும்பாக்கம் பகுதியில் 15 கிலோ கஞ்சா கடத்தியவர் வாகனத்துடன் கைது
X
சென்னை பெரும்பாக்கத்தில் கஞ்சா கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் பெரும்பாக்கம் பகுதியில் 15 கிலோ கஞ்சா கடத்தியவர் வாகனத்துடன் கைது செய்யப்பட்டார்.

சென்னை பெரும்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் பெரும்பக்கம், சித்தாலபாக்கம், உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரை மடக்கி சோதனையிட்டதில் அவரிடம் 15 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.

இருசக்கர வாகனத்தோடு பறிமுதல் செய்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்ததில் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த மணிகண்டன்(37), என தெரியவந்தது. ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவர் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!