மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 5 பசுமாடுகள் உயிரிழப்பு

மேடவாக்கத்தில் மின்சாரம் தாக்கி 5 பசுமாடுகள் உயிரிழப்பு
X

மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த 5 பசுமாடுகள்

மேடவாக்கத்தில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததில் ஏற்பட்ட விபத்தில் 5 பசுமாடுகள் உயிரிழந்தது.

செங்கல்பட்டு மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே உள்ள மேடவாக்கம் பாபு நகரில் வசிப்பவா் ஆதிகேசவன் (45). பால் வியாபாரியான இவா் இன்று காலை மாடுகளில் பால் கறந்துவிட்டு,மாடுகளை மாட்டு கொட்டிலிருந்து அவிழ்த்து வெளியே ரவி தெருவில் ஓட்டி வந்தாா்.

அப்போது அந்த மாடுகள் தெருவில் தேங்கிய மழை நீரிரை கடந்து செல்கையில் ஒவ்வொரு மாடாக சுருண்டு விழுந்தன. அதைப்பாா்த்து ஆதிகேசவன் அதிா்ச்சியடைந்து நின்றாா்.அதோடு மின்சார கம்பி அறுந்து மழைநீரில் விழுந்து கிடந்ததையும் பாா்த்தாா்.இதற்குள் அப்பகுதி மக்களும் அங்கு கூடிவிட்டனா்.மின்கம்பி அறுந்து தண்ணீரில் கிடந்ததால் மின்சாரம் பாய்ந்து மாடுகள் உயிரிழந்துவிட்டதை அறிந்து மின்வாரியம், போலீஸ்,தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனா்.

இதனையடுத்து மேடவாக்கம் மின்பராமரிப்பு துறையினா் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தினா்.அதோடு மேடவாக்கம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மின்சாரம் தாக்கி இறந்த மாடுகளை அப்புறப்படுத்தினார்கள். பள்ளிக்காரணை போலீசாா் விசாரணை நடத்துகின்றனா்.

மாடுகளை முதலில் அனுப்பிவிட்டு,ஆதிகேசவன் பின்னால் வந்ததால் அவா் உயிா் தப்பினாா்.இல்லையேல் மாடுகளுடன் சோ்ந்து அவரும் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!