பெண் தோழியை பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்திய பல் மருத்துவர் உள்பட 3 பேர் கைது
லிவிங் டூ கெதர் பெண் தோழியிடம் பல் மருத்துவர் போதையில் நண்பர்களோடு சேர்ந்து கூட்டு பாலியல் உறவில் ஈடுபட கட்டாயபடுத்துவதாக பெண் அளித்த புகாரில் பல் மருத்துவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பள்ளிகரணை அடுத்த கோவிலம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 31 வயதான கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் பெண்ணின் தோழி ஷெரின் என்பவர் மூலம் கடந்த 2021 ஜூலை மாதம் பல் மருத்துவர் நிஷாந்த்(32), அறிமுகமாகி யுள்ளார். அதன் பிறகு இருவரும் பேசி பழகியுள்ளனர் நிஷாந்தும் மனைவியை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறி, நாம் இருவரும் திருமணம் செய்து கொள்ளலாம் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
பின்னர் அப்பெண்ணின் மாமல்லபுரம் வீட்டில் தங்கி பேசி திருமணத்திற்கு சம்மதம் பெற்று, திருமணம் செய்து கொள்ளாமலேயே மனைவி என பல் மருத்துவமனையில் பணிபுரியும் பெண்ணிடம் அறிமுகப்படுத்தி நம்ப வைத்துள்ளார்.இதையெல்லாம் நம்பிய பெண் ஒன்றாக இருக்க சம்மதித்துள்ளார். அடிக்கடி மாமல்லபுரம் செல்ல முடியாததால் பள்ளிகரணை லாட்ஜில் சில நாட்கள் தங்க வைத்ததாகவும் பின்னர் அவரது வீட்டிலேயே இருவரும் வாழ்ந்து வந்துள்ளனர்.
போதை பழக்கத்திற்கு அடிமையான நிஷாந்த் தனது நண்பர்களான கோகுல், ஹர்த்திக் ஷெரின் ஆகியோரை வீட்டிற்கே அழைத்து பார்ட்டி வைத்து கொண்டாடியுள்ளார். பிறகு அவர்களோடு சேர்ந்து கூட்டு பாலியல் வல்லுறவு வைத்துக் கொள்ள கூறி வற்புறுத்தியுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் அடித்து துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். தினந்தோறும் போதை பொருள் பயம்படுத்திவிட்டு மிகவும் மிருகத்தனமாக உடலுறவு வைத்து கொள்ள நடந்து கொள்ள முயன்றபோது அதற்கு ஒப்புகொள்ளாததால் அவர் அடித்ததில் காது சரியாக கேட்கவில்லை, இருப்பினும் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டார்.
இது குறித்து நிஷாந்தின் அம்மாவிடம் முறையிட்ட போது எனக்கு ஆதரவாக இல்லாமல், எனது மகன் மீது நீ புகார் கொடுத்தால் அந்தரங்க படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாகவும், கடந்த 2021, பிப்ரவரி 25ம் தேதி தூக்க மாத்திரைகளை கொடுத்து விட்டு வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு ஓடி விட்டதாகவும், அவர்கள் அனைவர் மீது நடவடிக்கை எடுக்கும் படி பள்ளிகரணை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பள்ளிகரணை போலீசார் புகாரை சேலையூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றி பாலியல் வன்கொடுமை, பெண்கள் வன்கொடுமை, ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது, தாக்கியது என 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து பல் மருத்துவர் நிஷாந்த், அவரது நண்பர்கள் ஷெரின், ஹர்த்திக் ஆகியோரை கைது செய்தனர். .நிஷாந்த் அவரது நண்பர்கள் மூலம் விவாகரத்தான பெண்களை குறிவைத்து ஒன்றாக இருப்பதை வாடிக்கையாக கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu