சென்னை பெருங்குடியில் கழிவுநீர் உறை கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் பலி

சென்னை பெருங்குடியில் கழிவுநீர் உறை கிணற்றை சுத்தம் செய்த 2 பேர் பலி
X

சென்னை பெருங்குடியில் இருவரை பலிவாங்கிய உறை கிணறு.

சென்னை பெருங்குடியில் கழிவுநீர் உறை கிணற்றை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.

சென்னை பெருங்குடி, கல்லுக்குட்டை, அன்னை சந்தியா நகர் விரிவாக்கம், 13வது ஒளவையார் தெருவில் வசித்து வந்தவர் சரவணன்(49), இவர் அச்சகம் வைத்து நடத்தி வருகிறார்.

அவரது வீட்டில் உள்ள 7 அடி ஆழமுள்ள உறை கிணற்றில் உள்ள கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக நீலாங்கரையை சேர்ந்த காளிதாஸ்(55), என்பவரை அழைத்து வந்துள்ளார். உறை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்து கொண்டிருந்த போது காளிதாஸ் விஷவாயு தாக்கி மயங்கினார். அவர் மயங்கியதை கண்டு சரவணன் அவரை காப்பாற்ற முயன்ற போது கால் இடறி விழுந்ததில் அவரும் தலையில் அடிப்பட்டு மயங்கினார்.

தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு, ஆம்புலன்ஸ் வரவழைத்து சோதித்து பார்த்ததில் இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக இராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்