சுயதொழில் செய்ய ரூ 12 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், அமைச்சர் வழங்கல்

சுயதொழில் செய்ய  ரூ 12 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள், அமைச்சர் வழங்கல்
X

செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பரசன் சுய தொழில் செய்ய உபகரணங்களை வழங்கினார். 

சோழிங்கநல்லூர் அருகே சுய தொழில் செய்ய, ரூ 12 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வழங்கினார்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில் ஏழை எளிய மக்கள் சுயதொழில் செய்ய உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில் உள்ள குடிசை மாற்று வாரிய அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஊரக தொழில்த்துறை மற்றும் குடிசை மாற்று வாரியத்துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்கள் பயணாளிகளுக்கு சுமார் 12 லட்சம் மதிப்பிலான சிற்றுண்டி கடை வைக்க அனைத்து வகையான பாத்திரங்கள், தையல் மெஷின், தள்ளு வண்டி, ஜெராக்ஸ் மெஷின் ஆகியவற்றை வழங்கினார்.

உடன் சோழிங்கநல்லூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் எஸ்.அரவிந்த் ரமேஷ், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர், குடிசை மாற்று வாரிய இயக்குநர், சோழிங்கநல்லூர் பகுதி செயலாளர்கள் பெருங்குடி எஸ்.வி. ரவிசந்திரன், மதியழகன் உள்ளிட்ட ஏராளமான திமுகவினரும், அரசு அதிகாரிகளும் இருந்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!