வாக்கு சாவடி அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறை பணி கலந்தாய்வுக் கூட்டம்

வாக்கு சாவடி  அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறை பணி கலந்தாய்வுக் கூட்டம்
X

தேர்தல் வாக்கு சாவடி பதிவு அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு 

தேர்தல் வாக்கு சாவடி பதிவு அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறை பணிக்கான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று தேர்தல் வாக்கு சாவடி பதிவு அலுவலர்களுக்கான கணினி வழி சுழற்சி முறையில் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மாவட்ட தேர்தல் அலுவலர் மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத், தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமனம் செய்யப்பட்ட பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் கலைத்துறை அரசு சிறப்புச் செயலர் ஊரக உள்ளாட்சி தேர்தல் பார்வையாளர் சம்பத் ஆகியோர் தலைமையில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஆகியோர் இருந்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!