தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலக நிர்வாக குளறுபடி : போலீசார் திணறல்
தாம்பரம் போலீஸ் கமிஷனர் ரவி
தாம்பரம் காவல் ஆணையரகம், ஜன.,1ம் தேதி முதல் சோழிங்கநல்லூரில் செயல்பட்டு வருகிறது. போலீஸ் கமிஷனர் அலுவலகம் துவங்கப்பட்டு, 20 நாட்களை கடந்துள்ள நிலையிலும், கமிஷனர் அலுவலகத்தின் கீழ் செயல்படும், காவல் சரகங்களுக்கு, துணை மற்றும் உதவி ஆணையர்கள் நியமிக்கப்படவில்லை.
பல காவல் நிலையங்களில், ஆய்வாளர்கள் இன்றி, பொறுப்பு காவல் ஆய்வாளர்களே, பணியில் உள்ளதால், கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில், குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கமிஷனர் அலுவலகத்தில், அமைச்சுப் பணியாளர்களும் இல்லாததாலும், பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ், பணிபுரியும் பல போலீசார், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு, பணி மாறுதல் கேட்டும், அவர்களுக்கு, பணியிடமாறுதல் வழங்கப்படாமல் உள்ளதால், போலீசார் மன உளைச்சலில் தவிக்கின்றனர்.
கமிஷனர் அலுவலகத்திற்குட்பட்ட, காவல் நிலையங்களின், ரோந்து பணிக்காக வழங்கப்பட்ட, 10 வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்ப, போலீசார் தங்களது சொந்த பணத்தையே பயன்படுத்துகின்றனர்.
அதேபோல், கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, ‛மைக்-3'க்கு மட்டும், கட்டுப்பாட்டு அதிகாரியாக கமிஷனர் உள்ள நிலையில், கமிஷனர் அலுவலகத்தில் உள்ள, மற்ற மைக்குகளுக்கு அதிகாரிகளும் நியமிக்கப்படவில்லை. இவ்வாறு, கமிஷனர் அலுவலகம் துவங்கியும், பல குளறுபடிகள் நீடிப்பது, போலீசாரிடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu