உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு புகைப்பட கண்காட்சி: செங்கல்பட்டு ஆட்சியர் திறப்பு
உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் சென்னை வட்டம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள் என்ற தலைப்பிலான புகைப்பட கண்காட்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ. ஆர். ராகுல்நாத் திறந்து வைத்தார்.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் கடற்கரை கோவில் வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த இந்த புகைப்பட கண்காட்சியை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், வருங்கால தலைமுறைகளுக்கு நாம் நமது கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் மதித்து அதன் பெருமைகளை எடுத்துரைக்க வேண்டியது நம் கடமை எனவும், பள்ளி மாணவ, மாணவிகள் புராதன சின்னங்களில் வரலாறுகளைத் தெரிந்து அதனை பாதுகாப்பது அவர்களது கடமை எனவும் தெரிவித்தார். மேலும், தனியார் தொண்டு நிறுவன உதவியுடன் 3 பேட்டரி கார் வாகன வசதியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளர் காளிமுத்து, மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மாமல்லபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கண்காட்சி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வார நாட்களில் பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu