பல்லாவரத்தில் மூதாட்டி மீது இருசக்கர வாகனத்தில் மோதிய இளைஞர் யார்?

பல்லாவரத்தில்  மூதாட்டி மீது இருசக்கர வாகனத்தில் மோதிய இளைஞர் யார்?
X
சி.சி.டி.வி. கேமராவில்பதிவான சாலை விபத்து காட்சி.
பல்லாவரத்தில் மூதாட்டி மீது இருசக்கர வாகனத்தில் மோதிய இளைஞர் யார்? என்று சி.சி.டி.வி. பதிவை வைத்து போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூர், சண்முக முதலியார் தெருவில் பல்சர் இரு சக்கர வாகனத்தை அதிவேகமாக ஓட்டி வந்த இளைஞர் ஒருவர் தெருவை கடக்க முயன்ற சரசு(80), என்ற வயதான மூதாட்டி மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் செல்லும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விபத்தை நேரில் பார்த்த அங்கிருந்தவர்கள் அந்த இளைஞரை பிடிக்க முயன்ற போது அவர்கள் மீதும் மோதுவது போல் அதிவேமாக இயக்கி நிற்காமல் சென்றுள்ளார்.

இதனையடுத்து அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் காயமடைந்த மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர்.

சி.சி.டி.வி. காட்சிகளை கைப்பற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் அதிவேகமாக வாகனத்தை இயக்கி விபத்து ஏற்படுத்தியதாக வழக்குபதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி தப்பியோடிய இளைஞரை தேடி வருகின்றனர்.

Next Story