பல்லாவரத்தில் மத்திய அரசை கண்டித்து வாலிபர், மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பல்லாவரத்தில் மத்திய அரசை கண்டித்து வாலிபர், மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

பல்லாவரத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

பல்லாவரத்தில்ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்து இந்திய மாதர் சங்கம் சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் 73 வது குடியரசு தின விழாவில் தமிழகம் சார்பில் பங்கேற்ற வேலுநாச்சியார், பாரதியார் ரத ஊர்தியை நிராகரித்ததை கண்டிக்கும் வகையிலும் அதேபோன்று தமிழகத்தில் ரிசர்வங்கி அதிகாரிகள் குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்தில் எழுந்து நின்று மரியாதை செலுத்தவில்லை எனவும் இதனை கண்டித்து ஏராளமனோர் கண்டன பதாகைகள் ஏந்தி மத்திய அரசை கண்டித்து இன்று காலை கோஷமிட்டவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!