மது கிடைக்காத ஆத்திரத்தில் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபர்

மது கிடைக்காத ஆத்திரத்தில் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபர்
X

பாதிக்கப்பட்ட சையத் அலி

மது கேட்டு வாங்கித் தராததால் நண்பரின் வயிற்றை பிளேடால் கீறிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல், ஆதி தெருவை சேர்ந்தவர் சையத் அலி(25), பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது வீட்டினருகே வசித்து வருபவர் ரஞ்சித்(34), இரு தினங்களுக்கு முன்பு, சையத் அலியிடம் மது வாங்கி தர சொல்லி கூறியுள்ளார். அதற்கு, அவர் மது வாங்கி தர மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், காலை வீட்டின் வாயில் முன்பு இருசக்கர வாகனத்தை கழுவிக் கொண்டிருந்த சையத் அலியின் வயிறு மற்றும் கையி பிளேடால் அறுத்துவிட்டு தப்பிச் சென்றார். வயிறு கிழிப்பட்ட நிலையில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வயிற்றில் 17 தையலும், கையில் 5 தையலும் போடப்பட்டுள்ளது. சங்கர் நகர் போலீசார் ரஞ்சித்தை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
ai and future cities