கிழக்கு தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர், நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம்

கிழக்கு தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்கத்தினர், நூற்றுக்கும் மேற்பட்டோர்  ரத்ததானம்
X

கிழக்கு தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த ரத்ததான முகாம்.

கிழக்கு தாம்பரத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புற்று நோயாளிகளுக்கு உதவும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு தாம்பரத்தில் நடிகர் விஜயின் 47-வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் புற்று நோயாளிகள் சிகிச்சைக்கு ரத்த தானம் மற்றும் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் இளைஞர் அணி சார்பில் மாவட்ட செயலாளர் தினேஷ் தலைமையில் நடந்த முகாமில் நூற்றுக்கும் மேற்பட விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டு ரத்ததானம் செய்தனர்.

அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் ஈ.சி.ஆர். சரவணன் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து ஏழை, எளிய மக்கள் சுமார் 300 பேருக்கு அன்னதானம் வழக்கப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!