பல்லாவரம் 20வது வார்டில் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு

பல்லாவரம் 20வது வார்டில் விசிக வேட்பாளர் தீவிர வாக்கு சேகரிப்பு
X

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தாம்பரம் நகராட்சி பல்லாவரம் 20வது வார்டில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தாம்பரம் நகராட்சி பல்லாவரம் 20வது வார்டில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

சென்னை பல்லாவரம் கோல்டன் அவென்யூ, ஈஸ்வரன் நகர் மற்றும் சுற்றியுள்ள 20வது வார்டில் போட்டியிடும் விடுதலை சிறுத்தை கட்சியின் வேட்பாளர் முத்துக்குமார் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், வெற்றி பெற்ற பிறகு மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை உடனடியாக தீர்ப்பதாக உறுதி அளித்தார்.

அவருடன் கட்சியின் 20வது வார்டு தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட பொருளாளர் பம்மல் சுப்ரமணி மற்றும் பல்லாவரம் தொகுதி செயலாளர் திருநீர்மலை தமிழரசன் மற்றும் கட்சி நிர்வாகிகள் நகர செயலாளர் ரமேஷ், மாவட்ட அமைப்பாளர் சிறுத்தை சிவா, மாவட்ட அமைப்பாளர் தனசேகர், நகர துணைச் செயலாளர் அமர்நாத் வட்டச்செயலாளர் பரணி குமார் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!