வைகோ பிறந்தநாள்: அரசு மருத்துவமனயில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

வைகோ பிறந்தநாள்:  அரசு மருத்துவமனயில் பிறந்த 10  குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
X

வைகோ பிறந்தநாளில் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய மதிமுக நிர்வாகிகள்

வைகோவின் 77 -ஆவது பிறந்த நாளில் பிறந்த 10 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் வழங்கினார்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோவின் 77 -ஆவது பிறந்தநாளை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் பிறந்த 10 குழந்தைகளுக்கு மாவட்ட செயலாளர் மாவை மகேந்திரன் தலா 1 கிராம் தங்க மோதிரம் தங்க மோதிரம் வழங்கினார். பல்லாவரம் நகர செயலாளர் டாக்டர் அக்கீம், மாவட்ட துணைச் செயலாளர் குரோம்பேட்டை நாசர், தாமபரம் நகரசெயலாளர் ராஜா முகமது, பம்மல் நகரசெயலாளர் தேவேந்திரன், தலைமை மருத்துவர் பழனிவேல் உட்பட மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!