பல்லாவரம் அருகே இளைஞரை கடத்திச் சென்ற தாக்கிய இருவர் கைது

கடத்தி சென்று தாக்கியதாக கைது செய்யப்பட்டவர்கள்
சென்னை பல்லாவரம் அடுத்த அனகாபுத்தூரை சேர்ந்தவர் யோகேஷ்வரன்(26), இவரது தந்தை நடத்தி வரும் மளிகை கடையை கவனித்து வருகிறார். இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு கடையை மூடிவிட்டு சென்ற போது நான்கு நபர்கள் இவரை கடத்திச் சென்று பொழிச்சலூரில் பாழடைந்த கட்டடத்தில் வைத்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் யோகேஷ்வரன் படுகாயமடைந்தார்.
கடத்திய நபர்கள் மது போதையில் நன்கு தூங்கிய நிலையில் யோகேஷ்வரன் அங்கிருந்து தப்பி வீட்டிற்கு ஓடி வந்து விட்டார். பின்னர் வீட்டில் உள்ளவர்கள் அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இது குறித்து சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ததில், கடத்திச் சென்ற அனகாபுத்தூரை சேர்ந்த டைசன்(26), பொழிச்சலூரை பிரகாஷ்(30), ஆகியோரை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகின்றனர்.
கைதான இருவரிடம் விசாரித்ததில் யோகேஷ்வரன் அனகாபுத்தூரில் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாகவும் அதனால் கடத்திச் சென்று அடித்ததாக கூறினார். ஆனால் யோகேஷ்வரன் கூறுகையில், மாமூல் கேட்டதாகவும் அதை தர மறுத்ததால் தன்னை கடத்திச் சென்று தாக்கியதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட இருவர் மீதும் சங்கர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu