ஆட்டோவில் குட்கா சப்ளை செய்த இருவர் கைது: 250 கிலோ குட்கா, புகையிலை பொருள் பறிமுதல்

ஆட்டோவில் குட்கா சப்ளை செய்த இருவர் கைது:  250 கிலோ குட்கா, புகையிலை பொருள் பறிமுதல்
X

ஆட்டோவில், கடைகளுக்கு குட்கா வினியோகம் செய்த இருவரை பல்லாவரம் காவல்துறையினர் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 250 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள்.

பல்லாவரத்தில், ஆட்டோவில் கடைகளுக்கு குட்கா சப்ளை செய்த இருவர் கைதாகினர். 250 கிலோ குட்கா, புகையிலை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னை பல்லாவரம் அடுத்த திரிசூலம் பகுதியில், கடைகளுக்கு குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விநியோகம் செய்து வந்த இருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். திரிசூலம் பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருட்கள் விற்கப்படுவதாக பல்லாவரம் சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் தயாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், ஆய்வாளர் தயாள் தலைமையிலான காவல்துறையினர் கண்காணித்ததில் கடைகளுக்கு விநியோகம் செய்ய வந்த போது பல்லாவரம் ஈஸ்வரி நகர், சுரங்கப்பாதை அருகே ஆட்டோவில் குட்கா புகையிலை பொருட்களோடு வந்த நபரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 250 கிலோ குட்கா புகையிலை பொருட்களையும், ஆட்டோவையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் இருவரும் ஆதம்பாக்கத்தை சேர்ந்த அக்பர் சுல்தான் (36), முகமது அலி ஜின்னா (36), என்பது தெரிய வந்தது. பெங்களூரிலிருந்து புகையிலை பொருட்களை கொண்டு வந்து ஆட்டோ ஓட்டுவது போல் கடைகளுக்கு விநியோகம் செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்த பல்லாவரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
why is ai important to the future