குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

குரோம்பேட்டை சரவணா ஸ்டோர்ஸில் தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது
X
குரோம்பேட்டை சரவணாஸ்டோரில் திருடியதாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

"பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்" என்ற பழமொழிக்கேற்ப தொடர் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை பல்லாவரம் அடுத்த குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி., சாலையில் பிரபல துணிக்கடை (சரவணா ஸ்டோர்ஸ்) இயங்கி வருகிறது.
இந்த கடையின், நான்காவது தளத்தில், சிறுவர்களுக்கான துணிகள் விற்பனை செய்யும் தளம் உள்ளது. அங்கு, சிறுவர்களுக்கான ஆடைகள் எடுக்க, இருவர் வந்துள்ளனர்.
6 ஆயிரம் ரூபாய்க்கு ஆடைகளை எடுத்த அவர்கள், அவற்றை, திருட முயன்றுள்ளனர். இதை சிசிடிவி கேமராவில் கண்ட, கடை ஊழியர்கள் இருவரையும் பிடித்து, குராம்பேட்டை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணையில் இருவரும் திருவள்ளுர் மாவட்டம், திருத்தனியைச் சேர்ந்த, முரளி(41), கோதண்டன்(46), என, தெரியவந்தது. வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி தொடர்ந்து திருடிச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ள இவர்கள், ஆடைகளை திருடி திருத்தணியில் பாதி விலைக்கு விற்று பணம் பார்த்து வந்துள்ளனர்.
இதுவரை 85000 ரூபாய் அளவிற்கு ஆடைகளை திருடியிருப்பதாக சரவணா ஸ்டோர்ஸ் தரப்பில் போலீசாரிடம் கூறியுள்ளனர்.
இருவரையும் கைது செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!